நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் வாணி விழா கல்லூரியின் அதிபர் எஸ். ரவிச்சந்திரன் தலைமையில் சகல ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், விசேட அதிதிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என பலரின் பங்கேற்புடன் நேற்று (05) கல்லூரியின் சௌமிய கலையரங்கில் நடைபெற்றது.
இதன்போது காலையில் விசேட பூஜைகளை தொடர்ந்து மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தும் முகமாக கலை கலாசார நிகழ்வுகளுடன் ஏடு தொடக்கல் வைபவமும் இடம்பெற்றது.
நீலமேகம் பிரசாந்த்




