நுவரெலியா பிரதேச சபைக்கான 2023க்கான வரவு செலவு திட்டம் பத்தொன்பது உறுப்பினர்களின் ஏகமதான வாக்களிப்பின் ஊடாக நிறைவேற்றப்பட்டது.
நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தொடர் 13/10/2022 வியாழக்கிழமை தவிசாளர் வேலுயோகராஜ் தலைமையில் இடம்பெற்றது.இச்சபை அமர்வில் 2023க்கான வரவு செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டது.குறித்த அமர்வில் சபையில் 19 உறுப்பினர்கள் ஆதரவாகவும் ஒருவர் எதிராகவும் வாக்களிப்பட்டு வரவு செலவு திட்டம் அமோக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.அதோடு குறித்த அமர்வுக்கு மூன்று உறுப்பினர்கள் சமூகம் தரவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
2023ல் ஆறுமாதம் பூர்த்தியடைந்த கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொடர்ச்சியாக மூன்றுமாதம் போசாக்கு உணவு பொருட்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட வரிய மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்