மலையகத்தில் தொடரும் சீரற்ற கால நிலைகாரணமாக நுவரெலியா பெரகும்புர பகுதியில் மண்சரிவு அபாயத்தினால் இரண்டு குடியிருப்புக்கள் பாதிக்கபட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்இந்த சம்பவம் 20.08.2018 திங்கள் கிழமை மாலை இடம் பெற்றது இதன்போது நுவரெலியா பெரகும்பர பகுதிக்கு பாதிக்கபட்ட மக்களை பார்வையிட சென்ற ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.பி.ரத்நாயக்க குறித்த பகுதிக்கு சென்று பாதிக்கபட்ட மக்களை பார்வையிட்டதுடன் நுவரெலியா மாவட்ட செயலாளர் புஸ்பகுமாரா அவர்ளோடு தொடர்பு கொண்டு குறித்த பகுதிக்கு தேசிய கட்டிட ஆய்வாளர்களை வரவழைப்பதற்கு கோறியுள்ளார். குறித்த பகுதியில் 79குடியிருப்புகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கபடுகிறது.
இதேவேலை பாதிக்கபட்ட இரண்டு குடியிருப்பாளர்களும் நுவரெலியா பெரகும்புர பகுதியில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கவைகக்பட்டுள்ளதோடு தங்கவைக்கபட்டுள்ள மகக்ளுக்கான உளர் உணவு பொருட்களை வழங்குவதற்கு நுவரெலியா பிரதேசசெயலாளர் காரியாலயத்திற்கு அறிவிக்கபட்டுள்ளதோடு அவர்களுக்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர எஸ்.சதீஸ்)