நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்டநுவரெலியா மாகாஸ்தோட்டம் கீழ் பிரிவு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் நேற்று (27) சனிக்கிழமை இரவு திருட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
இரவு ஆலயத்தில் வழமையான பூஜைகள் நடைபெற்ற பின் இரவு 8 மணிக்கு மூடப்பட்ட ஆலயத்தை நேற்று காலை 6 மணிக்கு திறக்கும் பொழுதுசுவாமியின் மூலஸ்தானம் திறந்திருந்துள்ளது.அதனை தொடர்ந்து ஆலய நிர்வாக சபையினரும் தோட்ட பொது மக்களும் ஆலயத்தினுள் சென்று பார்த்த பொழுது ஆலயத்தின் தெற்குவாசல் கதவு கண்ணாடி உடைக்கப்பட்டு கதவை திறந்து உள் நுழைந்த ததிருடர்கள் சுவாமி சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த தாழிமணி தங்க ஆபரணங்களையும் ஆலய ஒலிபெறுக்கி உபகரணங்கள் மற்றும் ஆலய உண்டியலையும் திருடி சென்றுள்ளார்கள்.
திருடப்பட்ட உண்டியலை ஆலமுற்றத்தில் உடைத்து பணத்தை எடுத்துக்கொண்டு உண்டியலை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். நுவரெலியா பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து அங்கு சென்ற நுவரெலியா பொலிஸார் மோப்ப நாய்களுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் விரல் அடையாளயங்கள் எடுத்து கொண்டார்கள். சந்தேகத்தின் பெயரில் 6 பேரை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளதோடு மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டி சந்ரு