நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச செயலங்களின் உப அலுவலகங்கள் விரைவில் திறக்கப்படும்.

0
215

நுவரெலியா மாவட்டத்தில் மக்களின் நலன் கருதி முதலாவது உப பிரதேச செயலகம் தலவாக்கலை நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல பல உப பிரதேச செயலகங்கள் திறக்கப்படவுள்ளதாக நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா நிதிச்செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பிரதேச செயலகத்திற்கான உப அலுவலகம் (23.12.2021 ) தலவாக்கலை நகரில் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்

அம்பகமுவ ,வலப்பனை,அங்குராங்கெத்த, கொத்மலை பகுதிகளுக்கான உப பிரதேச செயலகங்கள் திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன .

இன்றைய தினம் முதலாவதாக தலவாக்கலை நகரில் உப பிரதேச செயலக அலுவலகம் திறந்து வைக்கபட்டுள்ளது.ஏனைய பகுதிகளுக்கு அடுத்த அடுத்த வாரங்களில் திறந்து வைக்கப்படும் .இதன் மூலம் மக்களுக்கு தேவையான சேவையினை மிகவும் இலகுவாக ஆற்றிக்கொள்ளக்கூடிய வகையில் அமையப்பெரும்.

அதேபோல எல்லை நிர்ணய சபையிடம் கிரமசேவகர் பிரிவுகளை அதிகரிப்பதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . அதற்கான வேலைத்திட்டங்களை பிரதேச செயலாளர் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனக் குறிப்பிட்டார்…

இந்நிகழ்வில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் , நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதப்பாண்டி ராமேஸ்வரன் , மற்றும் மத்திய மாகாண ஆளுனர் லலித் யூ கமகே , மற்றும் நுவரெலியா பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீலமேகம் பிரசாந்த்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here