நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்கள் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் சமூர்த்தி பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபா அதிகரித்துள்ளார். இது உங்களுக்கு மாத்திரம் அதிகரிக்கப்பட்டதல்ல நாட்டில் உள்ள லட்சக்கணக்கான பேருக்கு அதிகரிக்கப்பட்டது ஆகவே பல மில்லியன் ரூபாய்கள் இந்த சமூர்த்தி கொடுப்பனவுக்காக பெற்றுக்கொடுக்கப்படுகிறது கடந்த ஆட்சியின் போது நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் சமூர்த்தி பெறுவதற்கு உரித்துடைய சுமார் 23000 பேருக்கு சமூர்த்தி வெட்டப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச் செயலாளருமான எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.
தலவாக்கலை லிந்துலை நகரசபைக்குட்பட்ட பகுதியில் சமூரத்தி உதவி பெரும் 100 குடும்பங்களுக்கு அதிகரிக்கப்பட்ட சமூர்த்தி உதவி கொடுப்பனவு பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
இன்று ஆயிரம் ரூபா சமூர்த்தி பெரும் ஒருவருக்கு ஆயிரம் ரூபா அதிகரிக்கப்பட்டு இன்று 2500 ரூபா பெற்றுக்கொடுக்கப்படுகிறது.நாட்டினுடைய பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் இன்று உங்களுக்கு தெரியும்.கௌரவ ஜனாதிபதி அவர்களும் நிதி அமைச்சர் அவர்களும் மக்களை என்றுமே கைவிடவில்லை நாட்டில் இன்று கொரோனா வரும் போது நம்முடைய நாட்டில் மற்றும் வரவில்லை முழு உலக நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. பொருளாதார நெருக்கடிகளும் பல பாதிப்பை ஏற்படுத்தியது அப்படியிருந்த போதிலும்.ஜனாதிபதி அவர்களும் நிதி அமைச்சர் அவர்களும் மக்களை என்றுமே கைவிடவில்லை நீங்கள் நினைக்கலாம் வெறும் ஆயிரம் ரூபா என்று ஆனால் இன்று நாட்டில் பல லட்சக்கணக்கான பயனாளிகள் இருக்கிறார்கள் ஆகவே பல கோடி ரூபாய்க்களை செலவிட வேண்டியுள்ளது அதே மாதிரி நிதியமைச்சர் ஒரு திட்டத்தை கொண்டு வந்தார் நீங்கள் எந்நாளும் சமூர்த்தியினை நம்பியிருக்காது சுய தொழில் செய்து சுயகாலில் நிற்க வேண்டும் என்று அதனால் சமூர்த்தி பயனாளிகளுக்கு பாரிய அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதற்கு தேவையான பல உபகரணங்களும் கையளிக்கப்பட்டுள்ளன.அது மாத்திரமின்றி மக்களின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்காக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 30 லட்சம் வழங்கப்பட்டது.பிரதேச சபை உறுப்பினருக்கு 40 லட்சமும், மாகாண சபை உறுப்பினருக்கு 2000 லட்சம்,அபிவிருத்தி குழு தலைவருக்கு 100 மில்லியன் என காசு ஒதுக்கப்பட்டுள்ளது.அதில் அரைவாசி காசினை சமூர்த்தி பயனாளிகள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்காக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சமூர்த்தி பயனாளிகள் நம்மலை நாமே நம்பி செயப்படுவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களும் நிதி அமைச்சர் அவர்களும் இந்த திட்டத்தினை கொண்டு வந்துள்ளார்கள்.
இன்று எதிர்கட்சியினர் மக்களை அரசாங்கம் கைவிட்டது என்று கூக்குரல் இடுகிறார்கள் மக்களை அரசாங்கம் கைவிட்டிருந்தால் இப்படி சமூர்த்தி கொடுப்பனவினை அதிகரித்திருக்குமா? இருக்கிற சமூர்த்தியினையும் வெட்டியிருக்கும். கடந்த அரசாங்கத்தில் நுவரெலியா மாவட்டத்தில் சமூர்த்தி பெறவேண்டி 23000 பேருக்கு சமூர்த்தி வெட்டப்பட்டுள்ளது.அதனை அவர்கள் கட்சி பார்த்து தான் கொடுத்தார்கள் ஆனால் இன்றுள்ள ஜனாதிபதியோ நிதி அமைச்சரோ அரசியல் பாரக்கவில்லை இது மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்றுதான் நினைத்தார்கள். ஆகவே என்றும் நீங்கள் அரசாங்கத்தின் விசுவாசிகளாக இருக்க வேண்டும்.இன்று எதிர்கட்சி அரசாங்கம் ஒன்றும் செய்யவில்லை என்கிறது என்றாவது ஜனாதிபதி அவர்கள் நாட்டின் அபிவிருத்தியினை நிறுத்தினாரா?சமூர்த்தியினை நிறுத்தினாரா, அல்லது சுயதொழிலுக்கு கொடுத்ததனை நிறுத்தினாரா எவ்வளவு தான் பொருளாதார பிரச்சினை காணப்பட்டாலும் நாட்டின் அபிவிருத்தி திட்டங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நாட்டில் இன்று என்ன பிரச்சினை காணப்பட்டாலும் எஞ்சிய மூன்று வருடங்களில் கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றுவோம் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார் ஆகவே மக்கள் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக தெரிவிக்கும் கருத்துக்களை பாராது அரசாங்கத்தின் சேவைகளை உணர்ந்து அரசாங்க பக்கம் மக்கள் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்