நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் தெரிவு செய்யப்பட்ட 35 ஆலயங்களின் புனரமைப்பு வேலைத்திட்டத்திற்கு 38 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இ.தொ.கா நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் அரசாங்கத்தின் கொள்கை சட்டகமான சுபீட்சத்தின் நோக்கு என்ற வேலைத்திட்டத்திற்கு அமைய பிரதமரும் புத்தசாசன மற்றும் மதவிவகார காலாச்சார அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவின் நிதி ஒதுக்கீட்டில் விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஆலோசணைக்கு அமைய ஆலயங்களை புனரமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்து ஆலயங்களை புனரமைப்பதற்கான தோட்ட வீடமைப்பு சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் வேண்டுகோளில் அமைய இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களின் புனரமைப்புக்கு தலா 38 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.அந்தவகையில் நுவரெலியா,கொத்மலை, அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு குறித்த நிதி ஒதுக்கீட்டு காசோலைகள் அனுப்பி வைக்கப்படுள்ளதாகவும் குறித்த பிரதேச செயலகத்தின் ஊடாக குறித்த பகுதியின் இந்து கலாச்சார திணைக்களத்திற்கு குறித்த நிதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நீலமேகம் பிரசாந்த்