நுவரெலியா மாவட்டத்தில் கடும்; மழை, மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் ஒரு வான்கதவு; திறப்பு, மக்கள் அவதானம்

0
188

நாட்டில் நிலவி வரும்; சீரற்ற காலநிலை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது.
தலவாக்கலை பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனவே மேற்கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு கீழ் பகுதியில் கொத்மலை ஓயாவிற்கு இருமருங்கிலும் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் மின்சாரசபை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக மாலை வேளையில் தொடர்ச்சியாக மழைபெய்து வருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளன. நீரேந்தும் பிரதேசங்களில் பெய்துவரும் அதிக மழை காரணமாக காசல்ரீ. கனியோன், லக்ஸபான, நவலக்ஸபான, விமலசுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகின்றன.

தொடர்ச்சியாக மழைபெய்து வருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன. எனவே மலைகளுக்கும் மண்மேடுகளுக்கும் அருகாமையில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் மண்சரிவு அபாயம் காணப்படும் பட்சத்தில் அப்பிரதேசங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மலையக நகரங்களின் தீபாவளி வர்த்தக நடவடிக்கைகளும் முடங்கியோயுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here