நுவரெலியா மாவட்ட தமிழ் மக்களின் உணர்வுகளுக்குமதிப்பளித்து, அவர்களுக்கான அரச பணிகளுக்கும் உதவிகளை செய்து இம்மாவட்ட மக்களின் மனதில் இடம் பிடித்திருந்த நுவரெலியா மாவட்ட மேலதிக செயலாளர் பி.ஏ.சரத் சந்திர அவர்கள் வவுனியா மாவட்ட செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இவர் 2015 ஆம் ஆண்டு முதல் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் மேலதிக செயலாளராகவும், இம் மாவட்டத்தின் மேலதிக மாவட்ட காணி பதிவாளராகவும் சிறப்பான சேவையை செய்துவந்திருந்தார்.
நுவரெலியா மாவட்டத்தில் இவரின் சேவைக்கால பகுதியில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை பகிக்கும் சேவைகள் செய்திருந்தார்.
அதேநேரத்தில் நுவரெலியா பெருந்தோட்ட மக்களுக்கு அரசாங்க உதவிகள், நிவாரணங்கள், காணி பிரச்சினைகள் உள்ளிட்ட அரச சேவைகளை இம் மக்கள் பெற்றுக்கொள்ள சக்தியாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாவில் இன மத பேதமின்றி சேவை செய்ததால் தமிழ் மக்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்த இவர் மீண்டும் தமிழ் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
டி.சந்ரு