நுவரெலியா மாவட்ட 74வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் இன்றைய தினம் காலை 8:30 மணி அளவில் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட நுவரெலியா மாநகர சபை ஏற்பாட்டில் நடைபெற்றது இவ் நிகழ்வில் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள் , அரச உத்தியோகத்தினர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகளின் பேண்ட் வாத்திய இசையும் நடைபெற்றது. 74 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை சிறப்பித்து நுவரெலியாவில் உள்ள கிரகரி குளத்தில் படகு சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து கிரிகோரி ஏரியில் படகு கண்காட்சியையும் நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
டி.சந்ரு செ.திவாகரன்