நுவரெலியா மாநகர விளையாட்டு உள்ளரங்கில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள500 படுக்கைகளை கொண்ட கொரோனா தொற்று தனிமைப் படுத்தும் மத்திய நிலையத்திற்கு ஒன்றிணைக் கப்பட்ட நுவரெலியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு தொகை பொருட்களை இன்று (21)வெள்ளிக்கிழமை வர்த்தக சங்கத்தின் தலைவரும்நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவருமான டக்லஸ் நானயக்கார தலைமையிலான குழுவினர் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட மற்றும் நுவரெலியா மாவட்ட மேலதிக செயலாளர் பதும் அனுராத சராத்சந்திர ஆகியோரிடம் பொருட்களை கையளித்தனர். இவ் வைபவத்தில் கலந்துக்கொண்ட வர்த்தக சங்கத்தின் உறுப்பினர்களையும் படங்களில் காணலாம்.