இன்று வெளியிடப்பட்டுள்ள க பொத சாதாரணத் தரபரீட்சை பெறுபேறுகளின படி நுவரெலியா கல்விவலயத்தின் ஹோல்புறூக் கோட்த்திலுள்ளமெராயாதமிழ் மகாவித்தியாலயமாணவர்கள் கோட்டத்தில் மிகச்சிறந்தபெறுபேறுகளை பெற்றுள்ளர்கள்.
பாடசாலையின் மாணவி ராஜாஜி பிரியாளினி 08 ஏ யும் 01 பியும் பெற்றுள்ளதுடன் பாடசாலை மட்டத்தில் பதினொரு பாடங்களில் 100 சதவீத பெறுபேறுகளுடன் அனைத்து மாணவர்களும் உயர்தரத்திற்கான சித்திகளையும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பெறுபேறுகளை பெற்றுள்ள மாணவர்ளுக்கும் வெற்றிகளுக்காக உழைத்திருக்கின்ற பாடசாலை ஆசரியர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கியுள்ள பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபர் நல்லதம்பி முத்துக்குமார் பாராட்டுகளையும் வாழத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
அக்கர்ப்பத்தனை நிருபர்