நெஞ்சில் ‘தில்’ இருக்குமானால் சொற்போரில் ஈடுபட வாருங்கள்- தொண்டாவுக்கு திலகர் பகிரங்க சவால்!!

0
150

 

“நாடாளுமன்றத்திலோ அல்லது தொலைக்காட்சியூடாகவே பகிரங்க விவாதத்துக்கு வருவதற்குரிய ‘தில்’ இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு இருக்கின்றதா? அவ்வாறு இருக்குமானால் சொற்போரில் ஈடுபடத் தயாரா?”

– இவ்வாறு சவால் விடுத்துள்ளார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளரான எம்.திலகராஜ்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டமும், பேரணியும் நேற்றுமுன்தினம் நுவரெலியாவில் நடைபெற்றது. ‘தில் இருந்தால் மோதிப் பாரு’ என்ற முழக்கத்துடனேயே பேரணி நடைபெற்றது. தனது மே தின உரையிலும் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி. இந்த வசனத்தை சுட்டிக்காட்டிப் பேசினார். “தில் இருந்தால் மோதிப் பாரு மூக்குடைத்துக் காட்டுகின்றேன்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஆறுமுகன் தொண்டமானின் கருத்து தொடர்பில் வினவியபோதே திலகர் எம்.பி. இந்தச் சவாலை விடுத்தார்.

“மக்களுக்காக நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் பேசுவதற்குரிய ‘தில்’ எமக்கிருக்கின்றது. அடாவடி அரசியலில் ஈடுபடுவதற்குரிய பெயர் ‘தில்’ அல்ல. எப்படியோ அவர்களுக்குத் ‘தில்’ இருக்குமானால், நாடாளுமன்றத்திலோ அல்லது தொலைக்காட்சியிலோ மலையகம் தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும். அதற்குரிய ‘தில்’ இருக்கின்றதா?” என்றும் கூறினார் திலகர் எம்.பி.கேள்வி எழுப்பினார்.

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here