நெடுந்தீவில் மதுபான சாலைக்குள் வாள்வெட்டு: இருவர் காயம்

0
2

நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலையில் நேற்றிரவு இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.

மதுபான சாலைக்குள் திடீரென புகுந்த இளைஞர்குழு, அங்கு இருந்த இளைஞர் குழுமீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இரண்டு பேர் தலையிலும் முகத்திலும் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் மீதும் வாள்வெட்டுக்கு ழுவினர் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச்செல்ல முற்பட்டபோது ஒருவர் கைது செய்யப்பட்டு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் தப்பிச்சென்றவர்களை தேடி கைது செய்யும் நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வீதியால் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாள்வெட்டுக்குழுவினர் மோட்டார் சைக்கிளில் பயணித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த மதுபானசாலையில் இதற்கு முன்னரும் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here