நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள் : ரஷ்ய மக்களிடம் புடின் வலியுறுத்து

0
52

உக்ரைன்(ukraine) மீதான படையெடுப்பை அடுத்து ரஷ்ய இராணுவத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டு வருகிறது.இதனால் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்வதென்பது படு திண்டாட்டமாக மாறியுள்ளது.

அத்துடன் ரஷ்யாவில்(russia) பிறப்பு விகிதமும் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.எனவே இதனை நிவர்த்தி செய்யும் வகையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யும்படி ரஷ்ய மக்களுக்கு ஜனாதிபதி புடின்(vladimir putin) வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: “உக்ரைனுடன் நடந்து வரும் போரின் காரணமாக நாட்டின் மக்கள் தொகை குறைந்துள்ளது. இது தேசத்தின் எதிர்காலத்திற்கு பேரழிவு.வேலையில் மிகவும் பிஸியாக இருப்பது சரியான காரணம் அல்ல. இனப்பெருக்கத்திற்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது.

வேலை செய்யும் இடத்தில் மதிய உணவு மற்றும் தேநீர் இடைவெளியின் போது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்”என அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here