கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தமைக்காக நபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரதம பாதுகாப்பு அதிகாரி கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டுக்கு இணங்கவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இந்த வெடி குண்டு அச்சுறுத்தல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக வாயிலில் சந்தேக நபர் குறிப்பொன்றை வைத்துள்ளதாகவும் மேலதிக தகவல்களை குறிப்பிட்ட பஸ்லில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரும் கறுவாத்தோட்ட பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.