நேற்று இரவு தடைப்பட்ட நோர்ட்டன் ஊடான பொது போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

0
117

தியகல நோர்ட்டன் பிரதான வீதியில் தியகலைலிருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் நேற்று (17) இரவு 7.30 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அவ்வீதியினுடான பொது போக்குவரத்து பல மணித்தியாலங்கள் துண்டிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து வீதி போக்குவரத்து அதிகார சபையினர் வீதியில் கொட்டிக்கிடந்த மண்ணை அகற்றியதனை தொடர்ந்து ஒருவழி பாதையில் சிறிய ரக வாகனங்களுக்கு மாத்திரம் திறக்கப்பட்டன. இன்று (18) காலை வீதியில் மேலும் அகலப்படுத்தியமையினை தொடர்ந்து கனரக வாகனங்கள் ஒருவழி பாதையில் செல்வதற்கு பாதை சீரமைக்கப்பட்டுள்ளன.

குறித்த இடத்தில் இரண்டாவது தடைவையாக இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. மலையகத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் இரவு வேளையில் மழை பெய்து வருகிறது .இதனால் ஹட்டன் கொழும்பு, தியகல நோர்ட்டன், மஸ்கெலியா நல்லதண்ணீர், ஹட்டன் நுவரெலியா உள்ளிட்ட பிரதான வீதிகளில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.

எனவே இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here