கொழும்பில் மற்றும் நாடாளவிய ரீதியில் நடைபெறும் கோட்ட கோ ஹோம் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முடங்கி மலையக பொது போக்குவரத்து இன்று (10) திகதி வழமைக்கு திரும்பியுள்ளன. ஹட்டன் பகுதியிலிருந்து நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகளோ தனியார் பேருந்துகளோ சேவையில் ஈடுபடவில்லை.
எனினும் இன்றைய தினம் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துளும் தனியார் பேருந்துகளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஈடுப்பட்டிருந்தன.
ஹட்டனிலிருந்து தூர பிரதேசங்களும் மிகவும் குறைந்த அளவு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமையினால் பயணிகள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர். இதே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த மலையகப்பகுதில் அடைக்கப்பட்ட கடைகள் இன்று வழமைப்போல் திறந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமையும் காணக்கூடியதாக இருந்தன.
நேற்றை தினம் வெறிச்சோடி காணப்பட்ட நகரம் இன்று மக்கள் நடமாடுவதனை காணக்கூடியதாக இருந்ததுடன் வர்த்தக நடவடிக்கைகளும் வழமை போல் இடம்பெற்றன.
மலைவாஞ்ஞன்




