லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரணிவத்தை தோட்ட கடை ஒன்றில் நேற்று மாலை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
நேற்று மாலை 4 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் தெரிவிக்கையில்…
தனது கடைக்கு தலவாக்கலை நகரில் இருந்து பொருட்கள் வாங்கி வந்து அதனை கடையில் அடுக்கி வைத்துவிட்டு தனது கையடக்க தொலைபேசியை சார்ஜ் போடுவதக்கு வீட்டின் உள்புறம் சென்று மீண்டும் கடைக்கு வந்தவேலை கடை கல்லாவை காணவில்லை ,அதில் 3270 ருபாய் பணம் இருந்ததாகவும் தெரிவித்தார்.
சம்பவம்தொடர்பில் உடனடியாக சின்ன ராணிவத்தை தோட்டத்துக்கு நிகழ்வு ஒன்றுக்காக வருகை தந்துருந்த லிந்துலை அதிகாரி பொலிஸ் கவணத்துக்கு கொண்டுவந்துள்ளனர் ,அந்தசமயத்தில் இருந்த் பொலிஸ் அதிகாரிகள் இது சம்பந்தமாக கவனம் செலுத்தபடவில்லை என கடை உரிமையாளர் தெரிவித்தார் அதனால் லிந்துலை பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இன்றைய (13)தினம் லிந்துலை பொலிஸார் விசாரனைகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தனர்.
பா.பாலேந்திரன்