நாட்டில் நேற்று (31) 2,912 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில், 2,882 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 30 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியிருந்தவர்களாவர்.
இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 186,364 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 30,140 ஆக உயர்வடைந்துள்ளது.
அதேநேரம், கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 1,915 பேர் நேற்று (31) குணமடைந்து சிகிச்சை மையங்களிலிருந்து வெளியேறினர்.
இதன்படி நாட்டில் கொவிட் தொற்றுக்கு ஆளாகி இருந்தவர்களில், 151,740 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.