நோட்டன்பிரிட்ஜ் பகுதியில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி.

0
177

அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நோட்டன்பிரிட்ஜ் பகுதியில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா வைரஸ் பூஸ்டர் தடுப்பூசி இன்று (15.12.2021) செலுத்தப்பட்டது.

நோட்டன்பிரிட்ஜ் விதுலிபுர விகாரையில் இந்த தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்படி களவெல்தெனிய, விதுலிபுர வடக்கு, விதுலிபுர தெற்கு, கிரிவனெலிய மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களில் உள்ள 5 கிராம சேவக பிரிவுகளில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களே இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில் ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட சுமார் 1100 பேர் 3வது பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டமை குறிப்பிடதக்கது.

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here