நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோட்டன் தியகல பிரதான வீதியில் 05 ம் கட்டைக்கு அருகாமையில் மண்சரிவு ஏற்பட்டதனால் குறித்த இவ்வீதியினுடான போக்குவரத்து பல மணித்தியாலங்கள் பாதிப்படைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் இன்று (03) அதிகாலை இடம்பெற்றுள்ளது பாரிய கற்களுடன் மண்திட்டு சரிந்து வீதியில் வீழ்ந்ததனால் இவ்வீதியூடை போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து நோட்டன் பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து வீதியில் சரிந்து வீழ்ந்த கற்கள் மற்றும் மண்ணை அகற்றியதனால் இவ்வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுளள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்து பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனாலும் குறித்த வீதியில் மண்திட்டுகள் மற்றும் கற்கள் புரளும் அபாயம் காணப்படுவதனால் மிகவும் அவதானமாக குறித்த வீதியினை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலைவாஞ்ஞன்




