அட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் ஸ்தலத்திலே பலியானதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த பெண் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த பெண் பாதையை கடக்க முற்பட்ட போது, அட்டனிலிருந்து மஸ்கெலியாவை நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸின் முன்சில்லில் சிக்குண்டு ஸ்தலத்திலே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ் விபத்து 23.06.2018 அன்று 5 மணியவில் சம்பவித்துள்ளதாகவும், பஸ்ஸின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
க.கிஷாந்தன், மு.இராமச்சந்திரன்