நோர்வூட் ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

0
200

நோர்வூட் ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களிடையே கொரோனா வைரஸ் தொற்றிய மேலும் 18 பேர் இன்று (15) அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார மருத்துவ அதிகாரி ஆர்.சந்திரராஜன் தெரிவித்தார்.
மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள நோர்வூட் ஆடைத் தொழிற்சாலையில் இன்று நடத்தப்பட்ட அன்டிஜென் சோதனைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 18 புதிய நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு குறித்த தொழிற்சாலை ஊழியர்களிடம் மேற்கொண்ட அன்டிஜென் சோதனைகளால் 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டனர்..

அடையாம் காணப்பட்ட ஊழியர்கள் போகாவந்தலா, மஸ்கெலியா, குடா மஸ்கெலியா, டிக்கோயா, நோர்வூட் மற்றும் பல இடங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இந்த ஆடைத் தொழிற்சாலையில் வேலைக்கு வருகின’றமை குறிப்பிடத்தக்கது.

 

 

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here