நோர்வூட் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களுக்கு எதிர்வரும் 12 ம் திகதி வரை விளக்க மறியல்.

0
128

மூன்று கோடியே 54 லட்சம் பெறுமதியான நோர்வூட் பகுதியில் தங்க நகைகள் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு எதிர்வரும் 12 ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறும் தங்கை நகைகளை அடகு கடை வர்த்தகரிடம் பத்திரமாக வைக்குமாறு ஹட்டன் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகரில் இயங்கி வந்த அடகு பிடிக்கும் வர்த்தக நிலையம் ஒன்றினை உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கடந்த 30 திகதி ஹட்டன் கோட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நீதி மன்றில் ஈஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவுது கடந்த வருடம் 2021 டிசம்பர் மாதம் 09 திகதி குறித்த இடகு நிலையத்தினை உடைத்து மூன்று கோடியே 54 லட்சம் ரூபா பெறுமதியான 177 பவுன் தங்க நகைகள் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 11 ம் திகதி நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைபாமு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டுக்கு மேலதிகமாக ஹட்டன் கோட்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் செய்யப்பட்ட முறைபாட்டினை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட ஹட்டன் கோட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் ஒரு பெண் மூன்று ஆண்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர்களில் ஒருவரின் நோர்வூட் வெஞ்சர் வீட்டில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த கொள்ளை சம்பவத்தில் திருடிச்சென்ற 179.59 எடை கொண்ட 54 தங்கச் சங்கிலிகள் 526.16 எடை கொண்ட 757 தோடுகள்,144.36 எடை கொண்ட 177 பெண்டன்கள், 404.71 எடை கொண்ட 404 மோதிரங்கள், 101.89 எடை கொண்ட 84 டசல்கள், 41.22 எடை கொண்ட பேஸ்கட்கள், 5.99 எடை கொண்ட 01 வளையல், 7.32 எடை கொண்ட நிக்லஸ் 4.73 எடை கொண்ட தங்கத்துண்டுகள் ஆகயன இதன் போது மீட்கப்பட்டன.

இதன்போது இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதா சூத்திரதாரி பெண்ணான ரத்நாயக்க முதியன்சலாகே ரோசினி கண்ணன் ராஜசேகரன்,நாகன் ஸ்கந்த முருகன்,சரணமுத்து சுபராஜ் உள்ளிட்ட சந்தேக நபகர்கள் இதன் போது கைது செய்யப்பட்டனர்.

குறித்த அடகு பிடிக்கும் நிலையத்தில் கடந்த பல வருட காலமாக பணிபுரிந்த பெண் ஒரு இதன் சூத்தரிதாரியாக செயப்பட்டுள்ளமையும் குறிபிடத்தக்கது.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here