நோர்வூட் சென்ஜோன் டிலரி கீழ் பிரிவு தோட்டபகுதியில் பொகவந்தலாவ நோர்வூட் பிரதான வீதியின் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் கால்வாய் ஒன்றில் இனந் தெரியதாக பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கபட்டுள்தாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 09.07.2018.திங்கள் கிழமை காலை 08மணி அளவில் இந்த சடலம் கண்டு பிடிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
சென்ஜோன் டிலரி கீழ் பிரிவு தோட்டமக்கள் காலை தொழிலுக்கு சென்ற போதே குறித்த சடலத்தினை இனங்கண்டு நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.
சடலமாக இனங்கண்ட பெண் இதுவரையிலம் அடையாளம் காணபடவில்லையெனவும் 35வயது மதிக்கதக்க பெண்ணே இவ்வாறு சடலமாக இனங்கானபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
குறித்த சம்பவம் கொலையா அல்லது தற்கொலை என்பதை அறிவதற்காக சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதவான் வரவழைக்கபட உள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
எஸ்.சதீஸ், க.கிஷாந்தன்