நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்திலிருந்து 40 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு

0
262

தற்போது வெளியிடப்பட்டுள்ள 2022ம் (2023ம்) ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட நோர்வூட் தமிழ் வித்தியாலயத்தில் இருந்து பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் ஐந்து (5) மாணவர்கள் மூன்று ஏ (3யு) தர சித்திகளை பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அதனடிப்படையில் பொறியியல் தொழினுட்ப பிரிவு மாணவன் ளு.சினோஷன் மூன்று ஏ (3யு) தர சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளதுடன் னு.பிரதீஸ் எனும் மாணவன் 2யுஇடீ பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் நான்காமிடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

மேலும் பிரதான கலைப்பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் து.கிருபாலினி, P.லோசன்யா, வு.தனுக்ஷியா, ளு.சபிபிரகரிஸ்தா ஆகிய நான்கு மாணவிகளும் மூன்று ஏ (3யு) தர சித்திகளைப் பெற்று கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கல்லூரியின் மொத்த பெறுபேறுகளின் அடிப்படையில் 40ற்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்பதை அதிபர் மகிழ்ச்சியுடன் அறியத் தந்ததோடு இதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட உப அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், பாடசாலை நலன் விரும்பிகள் மற்றும் வலயக்கல்விக் காரியாலய பணிப்பாளர் உட்பட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here