அட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் 2025ஆம் ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டி 13.03.2025 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் பிற்கல் 5.00 மணிவரை நடைபெற்றது.
நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இவ் இல்ல விளையாட்டு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் பி.முத்துலிங்கம் தலைமையிலும் உடற் கல்வி ஆசிரியர் எஸ்.ஸ்ரீகுமார் வழிகாட்டலிலும் நடைபெற்றதுடன் இந்நிகழ்விற்கு அட்டன் வலய கல்வி பணிப்பாளர் ஆர். விஜேந்திரன் பிரதம அதிதியாக கலந்துக் சிறப்பித்தார்.
இந்த விளையாட்டு போட்டியில் ஆண் பெண் இருபாலாருக்குமான 100மீற்றர், 200மீற்றர் மற்றும் அஞ்சல் ஓட்ட போட்டிகள் நடைபெற்றதுடன் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான போட்டிகளுடன் விநோத உடை போட்டிகள், உடற் பயிற்சி கண்காட்சி மற்றும் மாணவர்களின் அணிநடையும் இடம் பெற்றது.
இந்த இல்ல விளையாட்டு போட்டியில் முதலாம் இடத்தை வளவை இல்லமும் இரண்டாம் இடத்தை களனி இல்லமும் மூன்றாம் இடத்தை மகாவலி இல்லமும் பெற்றக் கொண்டது.
இவ்விளையாட்டுக் போட்டிக்கு கோட்டம் இரண்டின் கோட்டக் கல்வி பணிப்பளார் உட்பட்ட கல்வி புலத்தின் உத்தியோகத்தர்கள், பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என அதிகளவானோர் கலந்து சிற்ப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்)