பாரம்பரிய வைத்திய துறையினை தோட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கிலும் தற்போது கோரோனா பரவல் காரணமாக அரச வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையினை குறைத்துக்கொள்ளும் நோக்கிலும் நோர்வூட் பிரதேச சபையினால் நோர்வூட் நகரில் இலவச ஆயுர்வேத மருந்தகம் ஒன்று இன்று (10) திகதி நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
தொன்றுதொட்டு எமது மக்கள் பாரம்பரிய வைத்திய முறைகளை நம்பி வந்துள்ளனர். இந்நிலையில் இவர்களின் தேவைகளை பூர்த்தி; செய்து கொடுக்கும் முகமாக குறித்த ஆயர்வேத மருந்தகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயர்வேத மருந்தகம் திறப்பதன் பயனாக நோர்வூட் பிரதேசதேசத்திற்குட்பட்ட சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் நன்மையடைய உள்ளன.
குறித்த ஆயுர்வேத மருந்தகங்கள் பொகவந்தலாவை மற்றும் புளியாவத்த பகுதிகளிலும் திறக்கப்படவுள்ளன.
இந்த ஆயுர்வேத மருந்தகங்கள் திறப்பதன் மூலம் எமது பாரம்பரிய வாழ்க்கை முறைக்கு மாறுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுவதன் பக்கவிளைவுகள் இன்றி தங்களது நோயினையும் குணமாக்க முடிவதோடு வீண் பணச்செலவும் இல்லாது போகக்கூடிய நிலை உருவாக்கும் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்