கட்டுமான பணிகள் பாதியில் கைவிடப்பட்ட நோர்வூட் நகர சிவ சுப்பிரமணிய ஆலய கலாச்சார மண்டபம் புனரமைப்புக்காக 25 இலட்சம் ரூபாவை மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக கையளிக்கும் நிகழ்வு 28.07.2018 அன்று இடம்பெற்றது.நோர்வூட் நகர சிவ சுப்பிரமணிய ஆலய கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் கலந்து கொண்டு ஆலய பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதோடு, கடந்த அரசாங்க காலப்பகுதியில் கைவிடப்பட்டிருந்த கட்டிடத்தின் நிர்மாண பணிகளை அமைச்சர் பார்வையிட்டார்.
பார்வையிட்டதன் பின்பு இதனை உடனடியாக புனரமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இதன்போது மீள்கட்டமைப்பு பணிக்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் பெயர் பலகையை திரைநீக்கம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வின் போது, அமைச்சர் உட்பட மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் என கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
(க.கிஷாந்தன்)