நோர்வூட் பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் மேலதிக 14 வாக்குகளால் நிறைவேற்றும்.

0
207

நோர்வூட் பிரதேசசபையின் 2022 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் கே.கே. ரவி அவர்களின் தலைமையில் இன்று (17) திகதி முன்வைக்கப்பட்ட போது அந்த வரவு செலவு திட்டம் 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபைத்தலைவர் கே.கே ரவி தெரிவித்தார்.

நோர்வூட் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றுவதற்கான கூட்டம் இன்று நோர்வூட் பிரதேசயில் நடைபெற்றது குறித்த கூட்டத்தில் நோர்வூட் பிரதேசசபையின் 21 உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர் 11 பேரும், அருணலு மக்கள் கட்சியின் ஒரு உறுப்பினரும்,சுயேட்சை கட்சியினை சேர்ந்த ஒருவரும் ஐக்கிய தேசிய கட்சியின் ஒருவருமாக 14 பேர் ஆதரவாகவும் எதிராக ஐக்கிய தேசிய கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்கள் 07 பேர் இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here