பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தி உரிமை சார் விடயங்களை பெற்றுக்கொடுப்பதில் தமிழ் முற்போக்கு கூட்டணி வரலாற்று பதிவுகளை செய்துவருகின்றது என நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மு.இராமச்சந்திரன் தெரிவித்தார்நோர்வூட் பிரதேச சபைக்குற்பட்ட சமர்வில் ஒஸ்போன் கீழ் பிரிவு தோட்ட மக்களை 16.07.2018 சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
ஒஸ்போன் கீழ் பிரிவு விநாயகர் ஆலயம் புணர் நிர்மாணப்பணிக்காக நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மு.இராமச்சந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவரிகளின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 1 லட்சத்து ஐம்பதியிரம் ரூபா ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த ஆலயம் புணர் நிர்மாணப்பணிகள் தொடர்பில் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் தோட்ட பொதுமக்களை சந்தித்து உரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார்
இதன் போது தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் மலையகத்தில் கடந்த கால அரசியல் வரலாற்றோடு ஒப்பிடுகையில் கடந்த இரண்டரை ஆண்டு காலப்பகுதியில் தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளும் உரிமை சார் விடயங்ளையும் பறந்தளவில் செய்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
அத்தோடு வாக்குவங்கியை மையப்படுத்தி நுவரெலியா மாவட்டதை மட்டுமே மையப்படுத்தி அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது மலையக தமிழர்கள் வாழும் காலி ,கண்டி ,மாத்தளை மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளிலும் தற்போது அபிவிருத்தி திட்டங்களும் முற்போக்கு கூட்டணி முன்னெடுத்து வருகின்றது
மேலும் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் எமது மக்கள் முன்வைத்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கட்டம் கட்டமாக முன்னெடுக்க அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் முதற்காட்டமாக நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு 1 கோடி இருபது லட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார் இதனூடாக சகல வட்டார பகுதிகளுக்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம் என்றார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்