நோர்வூட் பிரதேச சபையில் செயலாளர் மற்றும் நோர்வூட் பிரதேச சபையின் தலைவரின் சாரதி உட்பட் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலா சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே.ரவி கடந்த 15 திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் நிலையில் இவருடம் நெருக்கமாக இருந்த நோர்வூட் பிரதேச சபையின் ஊழியர்கள் சுமார் 40 பேருக்கு கடந்த 15 பீசிஆர் செய்யப்பட்டது.
குறித்த பீசிஆர் முடிவுகள் நேற்று மாலை வெளியானதை தொடர்ந்தே குறித்த நபர்கள் அடையாளம் காணப்பட்பட்டுள்ளதுடன் அவர்கள் தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் நெருக்கமான தொடர்பு பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம், க.கிஷாந்தன்