கொவிட்- 19 தொற்று காலங்களில் கைவிடப்பட்ட வீதி அபிவிருத்தி பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது
நோர்வூட் – பொகவந்தலாவ பிரதான வீதியின் புனரமைப்பு பணிகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதனால் சுமார் 7 கிலோமீற்றர் வீதி புனரமைக்கப்படவுள்ளது. கொவிட்- 19 தொற்று காலங்களில் கைவிடப்பட்ட வீதி அபிவிருத்தி பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்தகாலங்களில் குண்டும் குழியுமாக காணப்பட்ட வீதியால் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயாளிகள், வாகனசாரதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்ததை தொடர்ந்து புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கொட்டகலை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரியிடம் கேட்ட போது, கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் மழை பெய்து வருகின்றது.
நோர்வூட் முதல் பொகவந்தலாவ வரை உள்ள வீதிகளை வெகுவிரைவில் புனரமைக்கமுடியுமென அவர் தெரிவித்தார்.