பங்களாதேஷிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் தொகை முழுவதையும் இலங்கை செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இலங்கை பங்களாதேஷிடமிருந்து 200 மில்லியன் டொலரை கடனாக பெற்றிருந்தது.
மேலும், கடனுடன் தொடர்புடைய 4.5 மில்லியன் டொலர் வட்டி தொகையையும் செலுத்தி நிறைவு செய்துள்ளதாக பங்களாதேஷ் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.