பங்களாதேஷில் பாடசாலை மீது விமானம் விழுந்து விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்வு!

0
7
Bangladesh's fire service and security personnel conduct a search and rescue operation as they clear the remains of an Air Force training jet that crashed into a school in Dhaka on July 21, 2025. At least 16 people, mostly students, were killed on July 21, when a training aircraft of the Bangladesh Air Force crashed into a school campus in the capital Dhaka, the government said. (Photo by Abdul Goni / AFP)

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பாடசாலை ஒன்றின் மீது விமானப்படை பயிற்சி ஜெட் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

தலைநகர் டாக்காவின் வட பகுதியிலுள்ள உத்தராவின் டயபாரி பகுதியில் இருந்து இன்று திங்கட்கிழமை அந்நாட்டு நேரப்படி பகல் 1.06 மணிக்கு F-7 BGI என்ற சீன தயாரிப்பு விமானம் புறப்பட்டு சுமார் 25 நிமிடங்கள் கழித்து விபத்துக்குள்ளானது.

மதிய உணவு இடைவேளையின் போதே விமானம் பாடசாலை உணவகத்தின் கூரை மீது விழுந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது அங்கு மாணவர்கள் பலர் இருந்துள்ளனர்.

விமான விபத்தை தொடர்ந்து அப்பகுதி தீப்பற்றி புகை மண்டலமாக காட்சிளித்தது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 50 பேர் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here