பங்களாதேஷ் நாட்டில் பல வாரங்களாக நடந்த கொடிய போராட்டங்களைத் தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
76 வயதான பிரதமர் ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும் ராணுவ ஹெலிகாப்டரில் இந்தியாவின் கிழக்கு மாநிலமான மேற்கு வங்காளத்திற்கு சென்றதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், மற்றொரு அறிக்கை, அவர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவுக்கு சென்றதாக கூறியுள்ளது.
ஆயிரக்கணக்கான மக்கள் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை முற்றுகையிட்டு, முழக்கங்களை எழுப்பிய நிலையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அத்துடன் இந்த போராட்டங்களால் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
15 ஆண்டுகால தலைவரின் ராஜினாமாவைக் கொண்டாடுவதற்காக மேலும் ஆயிரக்கணக்கானோர் டாக்காவின் தெருக்களில் குவிந்தனர்.