பங்களாதேஷ் ரயில் விபத்தில் 17 பேர் பலி

0
183

பங்களாதேஷில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூறு பேர் காயமடைந்துள்ளனர்.

பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியான டாக்கா மாகாணம் கிஷோர்கஞ்ச் மாவட்டம் பைரப் ரயில் நிலையத்தில் இருந்து டாக்கா நோக்கி இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணித்துள்ளது.

பைரப் ரயில் நிலையத்தில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில் பயணித்து சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக பயணத்தடம் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

மாற்று தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்மாறிக் கொண்டிருந்தபோது திடீரென எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று வேகமாக வந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 17 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here