பசறை மடுல்சீமை பிரதான வீதியில் ஆறாம் கட்டை பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 75 மீட்டர் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட நால்வரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி பசறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இம் முச்சக்கரவண்டி மஹதோவ கீழ் பிரிவிலிருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த வேளையிலே இன்று காலை 5 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது முச்சக்கர வண்டி பலத்த சேதங்களுக்கு உள்ளாகிய நிலையில் மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.