மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட 48 தனிவீடுகள் பசறை கோணகலை தோட்ட மக்களின் பாவனைக்கு இன்று கையளிக்கும் நிகழ்வூ தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர் மற்றும் பதுளை மாவட்ட இனைப்பாளர் ராஜமணிக்கம் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான பழனி திகாம்பரம்இ பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் மற்றும் பொருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவர் புத்திர சிகாமனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதன்போது 50 லட்சம் நிதி ஒதுகீட்டில் புதிய தனிவீட்டு திட்டத்திற்கான பாதைக்கான வேலைகளும் ஆரம்பித்து வைத்ததுடன் இங்கு நிர்மாணிக்கப்பட்ட அனைத்து வீடுகளும் “வீரன் புரம்” என்ற பெயரில் அமைக்கப்பட்டிருப்பது குறிபிடத்தக்கது