அக்கரபத்தினை பசுமலை 475 கிராம சேவகர் பிரிவில் உள்ள கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஒன்று (09) திகதி ஹோல்புறுக் சிங்கள மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தொடர்ந்து மலையகப்பகுதியில் கல்வி கற்கும் மாணவர்கள் கற்றல் உபகரணங்களின் விலையேற்றம் காரணமாக பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கினர்.
பெரும் பாலான பாடசாலைகளில் மாணவர்களின் இடை விலகல் எண்ணிக்கையும் அதிகரித்தன. இந்நிலையினை கருத்தில் கொண்டு நுவரெலியா கல்வி வலயத்தில் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன பாடசாலைகளில் மூன்று தமிழ் சிங்கள பாடசாலைகளை தெரிவு செய்து சுமார் 200 மேற்பட்ட மாணவர்களுக்கு இதன் இந்த அபிவிருத்தி சங்கத்தினால் கற்றல் உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
சங்கத்தின் தலைவர் அனுரகுமார அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் கே.எச் எஸ் வீரசிங்க,கிராம சேவகர் குழந்தைவேல்,ஆக்ரா பாடசாலை அதிபர் விநாகமூர்த்தி உட்பட அதிபர் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மலைவாஞ்ஞன்