பசுமாட்டினை திருடியவரை மடக்கி பிடித்த நானுஓயா பொலிசார்

0
245

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாவத்த பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட பசுமாட்டினை களவாடி விற்பனை செய்ய முற்பட்டவர் நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹட்டன் பிரதேசத்தில் இருந்து நுவரெலியா ஸ்கிராப் தோட்டத்திற்கு விருந்தாளியா வருகை தந்தவர் மீண்டும் இன்று காலை ஹட்டன் நோக்கி செல்லும் வழியில் பங்களாவத்த பகுதியில் வீதியோரத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட பசுமாட்டின் கயிற்றை அறுத்து மாட்டினை அடித்து இழுத்து சென்றதை கண்ட ஒருவர் ஏன் இவ்வாறு பசுமாட்டினை அடித்து , இழுத்துச் செல்கின்றீர்கள் என் வினவிய போது இம் பசுமாட்டினை விற்பனை செய்ய போகிறேன் , நான் வருமையில் இருக்கிறேன் , உண்ணுவதற்கு உணவு கூட வீட்டில் இல்லை எனவும் கூறியுள்ளார் , சந்தேகத்தில் பசுமாட்டினை விற்பனை எவ்வளவுக்கு விற்பனை செய்யப் போகின்றீர்கள் என விணவிய போதும் வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்கு நானுஓயாவில் விற்பனை செய்ய போவதாகவும் கூறியுள்ளார்.

இவ் வீதி வழியில் வந்தவர் ஒரு பசுமாட்டின் விலை இரண்டு லட்சம் தாண்டியுள்ள போதிலும் வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப் போவதாக கூறியதுனால் சந்தேகத்தில் நானுஓயா பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளார் இவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் பசுமாட்டினை களவடியவரை கைது செய்து பொலிஸார் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர் ஹட்டன் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

 

டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here