சாப்பாட்டை குறைத்து விட்டாலோ அல்லது விரதம் இருந்தாலோ அல்லது பட்டினியால் இருந்தாலோ உடல் எடை குறையுமா என்ற கேள்விக்கு மருத்துவர்கள் இது முழுக்க முழுக்க கட்டுக்கதை என்று கூறியுள்ளனர்.
விரதம் இருப்பது பட்டினியாக இருப்பது ஆகியவை உடல் எடை குறைக்க உதவும் என்பது கட்டுக்கதை என்றும் பட்டினியாக இருப்பதாலும் சில உணவுகளை தவிர்ப்பதாகவும் உடல் எடை குறையாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சில நாட்கள் மட்டும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து விட்டு மீண்டும் அதே உணவுகளை உண்ண தொடங்குவதால் உடல் எடை மேற்கொண்டு அதிகரிக்க தான் செய்யும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உடல் எடை குறைப்பதற்கு சரியான உடற்பயிற்சி மற்றும் கலோரிகள் குறைவதற்கான உடற்பயிற்சியை தேர்வு செய்து செய்ய வேண்டும் என்றும் பட்டினி கிடப்பதும் விரதம் இருப்பதும் சாப்பாட்டை குறைத்து சாப்பிடுவதும் உடல் எடையை குறைக்க உதவாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.




