பண்டாரவளை பிரதேசத்தில் உள் நாட்டு விமான நிலையம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
உள்நாட்டு விமான நிலையம் ஒன்றினை நிறுவ, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக கொழும்பு இருந்து பதுளை செல்ல 6 மணித்தியாலங்கள் வரை எடுக்கும். விரைவில் இந்த பயணங்களை மேற்கொள்வதற்காக இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்தத் திட்டத்தின் மூலம் 25 நிமிடங்களில் பதுளை செல்ல முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
பதுளைக்கு அதிகளவான சுற்றுலா பயணிகளை இழுக்கம் முயற்சியாகவும் இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.