பண்டிகைக் காலத்தில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்

0
145

எதிர்வரும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டுக்காக அத்தியாவசிய பொருட்கள் பலவற்றை இறக்குமதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, இன்று முதல் லங்கா சதொச நிறுவனத்திற்கு தினமும் 10 இலட்சம் முட்டைகள் விநியோகிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சந்தைக்கு அதிகபட்சமாக முட்டை விநியோகம் செய்யப்பட்டாலும் சந்தையில் முட்டை தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்த முடியாத காரணிகள் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

சில பேக்கரி உரிமையாளர்கள் தமது உற்பத்திகளுக்கு தேவையான முட்டைகளை இருப்பு வைக்கும் போக்கு காணப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here