பண்டிகை காலங்களில் ரயில் சேவைகள் தடைப்படும் சாத்தியம்

0
170

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கான விசேட பஸ் சேவை ஏப்ரல் 7ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து வசதிகளை எவ்வித பிரச்சினையும் இன்றி வழங்குவதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதற்குத் தேவையான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாக அதன் இயங்கும் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.

இதேவேளை, பண்டிகை காலத்துக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பண்டிகைக் காலங்களில் விசேட ரயில் சேவைகளை நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய புகையிரத சாரதிகள் பற்றாக்குறை மற்றும் பணிபுரியும் சாரதிகள் விடுமுறை கோருவதால் புத்தாண்டு காலத்தில் புகையிரத சேவை தடைபடும் அபாயம் உள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here