பதவி உயர்வு கிடைக்கும்… இன்றைய ராசிபலன் – 07.03.2026

0
5

மேஷம்

எதிர்பாராத நன்மைகள் கிட்டும். எடுத்த காரியம் வெற்றியடையும். பண வரவு சீராக இருக்கும். நண்பரின் உதவி கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் ஆர்வம் கூடும். பெண்களுக்கு வீட்டு செலவு அதிகரிக்கும். வெளிநபருடன் வாதம் வேண்டாம். தேகம் பளிச்சிடும். சுறுசுறுப்பு கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: கரும் பச்சை

ரிஷபம்

உத்யோகத்தில் மதிப்பு கூடும். பணத்தட்டுப்பாடு நீங்கும். வெளியூர் பயணம் வெற்றி தரும். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். திருமண முயற்சி பலிதமாகும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். தம்பதிகளிடையே அன்பு கூடும். உறவினர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியை நிரப்பும். பகுதி நேர வேலை கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கடல் நீலம்

மிதுனம்

குடும்பத்துடன் குலதெய்வ பிரார்த்தனைகளை முடிப்பீர்கள். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். காதலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. திடீர் பயணங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்து கொள்வார்கள். மாணவர்கள் நன்கு படித்து முன்னேறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கடகம்

வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கும். கணவன் – மனைவி உறவு மேம்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும். திடீர் செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். உடல்நலம் பலம் பெறும். விரும்பியவர் தேடி வருவர். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். திருமண முயற்சி வெற்றி தரும். அன்பு பெருகும்.

அதிர்ஷ்ட நிறம்: வான் நீலம்

பெண்களுக்கு நல்ல வரன் கிட்டும். கமிஷன் துறையினருக்கு லாபம் கிடைக்கும். தம்பதிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடும். தொழிலில் ஏற்றம் உண்டு. கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

கன்னி

தன்னம்பிக்கை மிளிரும். மூத்த அதிகாரிகள் பாராட்டுவர். ஆன்மீக யாத்திரை செல்வீர்கள். வியாபாரத்தில் உள்ளவர்கள் நிரந்தர கம்பெனிகளுக்கு மட்டும் கடனுக்கு பொருட்களை கொடுக்கலாம். பிள்ளைகளுக்கு படிப்பதற்குண்டான வசதியினை செய்து கொடுப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

துலாம்

பெரியவர்களிடம் பணிவு தேவை. அண்டை வீட்டார்கள் உதவுவர். ஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகள் தங்கள் கட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். தம்பதிகளின் ஒற்றுமை ஓங்கும். சிலருக்கு கவுரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

விருச்சிகம்

தம்பதிகளிடையே பிணக்கம் நீங்கும். பிள்ளைகளுக்கு அளவுக்கதிகமாக செல்லம் கொடுக்காமல் இயல்பு வாழ்க்கையினை புரிய வைக்கவும். பணப்பற்றாக்குறை வந்தாலும் கடைசியில் தேவையான நேரத்தில் எங்கிருந்தாவது பணம் வந்து சேரும். கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும். உடல் நலம் பலப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

தனுசு

சிறு தூர பயணம் ஏற்படும். கணவன் – மனைவியிடையே இருந்துவந்த பிணக்குகள் யாவும் தீர்ந்து சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். ஏஜென்ட்களுக்கு லாபம் கிடைக்கும். தாங்கள் கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாண்டு அதிக லாபத்தினை ஈட்டுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

மகரம்

சகோதரர்களின் உதவி கிடைக்கும். குடும்பத் தலைவிகள் ஆடை ஆபரணச் சேர்க்கை செய்வர். ஒரு சிலர் புதிய நகை திட்டத்தில் பணத்தை சேகரிக்க துவங்குவர். அலுவலகத்தில் நிம்மதி நிலவும். வெளியூர் பயணத்தால் அசதி ஏற்படும். இந்த பயணங்களால் நன்மைகள் ஏற்படும். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

கும்பம்

உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பெரிய பொறுப்புகள் கிடைக்கும். தங்களுக்கு பிடித்த கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும். பணத்திற்கு குறைவு ஏற்படாது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செலவு அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கைகள் தேவை. பூர்வீகச் சொத்து வந்தடையும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பர் .

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

மீனம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here