சீமெந்து விலை உயர்வால், சீமெந்து தொடர்பான அனைத்து கட்டுமான பணிகளும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஒரு மூட்டை சீமெந்து கிட்டத்தட்ட 3000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
விலை அதிகரிப்பால் சீமெந்து கொள்வனவு செய்வதை மக்கள் நிறுத்தினர் இதன் காரணமாக சந்தையில் உள்ள சீமெந்து கையிருப்பு காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சீமெந்து பதுக்கி வைத்திருந்த வியாபாரிகள் சீமெந்து விற்பனை செய்ய முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
சில வியாபாரிகள், 2950 ரூபாய்க்கு விற்கப்படும் சீமெந்து மூட்டை ரூ.1600 என குறைந்த விலைக்கு விற்க வியாபாரிகள் முயற்சி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்
சீமெந்து மூட்டைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்காக முகநூலில் போடப்பட்ட பதிவு இது.