மலையக மக்கள் முன்னணியின் பதுளை காரியாலயம் நாளை 24/04/2020 ஞாயிற்றுக்கிழமை மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.ராதாகிருஸ்ணன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
குறித்த காரியாலயம் பதுளை முத்தியங்கனை விகாரைக்கு அருகாமையிலுள்ள கட்டிடத்தில் உத்தியோகப்பூர்வமாக திறக்கப்படவுள்ளது.
பதுளை மாவட்டத்தில் பதுளை, பசறை, பல்லே கட்டுவ, ஹாலிஎல, மடுல்சீமை, லுணுகெல போன்ற பிரதேசங்களின் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் முகமாகவே இக்காரியாலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ம.ம.மு செயலாளர் பேராசிரியர்.விஜயசந்திரன், ம.தொ.மு பொதுச்செயலாளர் கே.சுப்ரமணியம், ம.ம.மு பிரதி தலைவர் அ.லோரன்ஸ், ம.தொ.மு நிதிச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உட்பட ம.ம.மு கவுன்சில் உறுப்பினர்கள், இளைஞரணி, மகளீர் அணி தலைவர்கள் கலந்துக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்.