பதுளையில் பெற்றோல் சுரேசை போல” அட்டனில் டான்ஸ்” ஏகாம்பரம் எனக்கு எதிராக போராட போகிறாராம்? செந்தில் கிண்டல்!

0
193

ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன அவர்களால் எனக்கு வழங்கபட்ட ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து யார் பிழப்பாளி” சென்றாலும் சரி பப்பாளிசாப்பிடாலும் சரி பாதுளை தமிழ் கல்வி அமைச்சி நேர்மையாகவும் முறையாகவும் இயங்குமென ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

28.01.2018.ஞாயிற்று கிழமை தலவாகலை நகரசபை மைதானத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது பேசிய போதே இதனை தெரிவித்தார் இதன் போது மேலும் பேசிய ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் அரசியலுக்காக ஆர்பாட்ட பேரணியில் ஈடுபடுவோர்கள் அப்படி வீட்டுக்கு சென்று விடுங்கள் யார் மீது என்ன நடவடிக்கை எடுக்கபட வேண்டுமோ அவர்கள் யராராக இருந்தாலும் சரி என்னிடம் முறைபாட்டு மனு ஒப்படைத்தால் அதற்கான நடவடிக்கையினை ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர் என்ற ரிதியில் நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டார்.

இன்று பொதுவாக அனைவரும் வாக்குகேட்குறார்கள் ஆனால் மலையக மக்களுக்கு வாக்குரிமை பெற்றுகொடுத்தது அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்கள்

மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதி அவர்களினால் மட்டும்தான் திர்க்கமுடியும் ஆகையால் தான் இலங்கை தொழிலாளர் காஙரஸ் ஜனபதிபதியோடு இனைந்து இந்த உள்ளுராட்சிசபை தேர்தலில் வெற்றிலை மற்றும் சேவல் சின்னத்தில் போட்டியிடுகிறது ஆகவே எமது மலையக மக்களுக்கு பொறுப்பு எங்கள் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எனவும் குறிப்பிட்டார்.

கடந்த பொதுதேர்தலின் போது தலவாகலை நகரசபை மைதனத்தில் இடம பெற்ற பிரச்சார கூட்டத்தின் போது அரிசி ஒருகிலோ விலை 55ருபாவும் தேங்காய் ஒன்றின் விலை 40ருபாவிற்கும் காணப்பட்டது அனால் தேஙகா 120ருபா அரிசி ஒரு கிலோ100ருபா பொருட்களின் விலைகளை குறைப்பதாகவே தான் ஜக்கிய தேசிய கட்சி வாக்குகளை பெற்றனர் ஆனால் இன்று பொருட்களின்விலை குறைக்கப்படவில்லை மக்கள் இன்றும் கஷ்டத்தின் மத்தில்தான் வாழ்ந்துவருகின்றனர்.

கடந்த வாரம் ஜக்கிய தேசிய கட்சியை சார்ந்த அமைச்சர்கள் ஒரு அறிவிப்பை செய்தனர் மதுபானசலைகளில் பெண்ங்களும் பணிபுரியமுடியுமென ஏன் என்றால் அப்போது தான் மதுபானத்தை அளவிடும் போது அதிகமாக அளவிடுவதாகவும் அரசாங்கத்தின் வருமானமும் அதிகரிக்கபடுமெனவும் கூறுகிறார் அவ்வபோது தான் ஆறுமுகன் தொண்டமான் கூறினார் எமது மலையக பெண்கள் குடும்ப குத்துவிளக்கு அவர்களை அது போன்ற இடங்களுக்கு தொழிலுக்க அனுப்பமுடியாது யெனவும் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.

இதே போல் பதுளையில் ஒருவர் இருக்கிறார் பெற்றோல் சுரேஸ் என்று அவரை போல் அட்டனில் ஒருவர் இருக்கிறார் டான்ஸ் ஏகாம்பரம் அவர்கள் எனக்கு எதிராக ஆர்பாட்டம் முன்னெடுக்கபோவதாக கூறுகிறார் எதற்கு வீதியில் இறங்கி போராட வேண்டுமோ அதற்கு மாத்ரம்தான் போரட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

பொகவந்தலாவ நிருபர்

எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here